Aran Sei

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற ஒன்றிய அரசு – பிரதமர் மோடி அறிவிப்பு

ன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இன்று(நவம்பர் 19), காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார்.

அப்போது, “விவசாயிகளின் நலனுக்காகவே ஒன்றிய அரசு மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். விவசாய சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம். சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று விவசாய சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளகிறோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்