Aran Sei

ஜனநாயக மாண்புகளை கேலிக்குள்ளாக்கும் பிரதமர் – ப.சிதம்பரம் கடும் கண்டனம்

credits : the indian express

இந்திய பிரதமர் மோடியும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும், ஜனநாயக மாண்புகளை கேலிக்குள்ளாக்கியிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் நேற்று, 4,14,182 பேர்   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,85,285  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,34,071 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,920  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “கொரோனா தொற்று பரவல், மோசமான நிலையில் இருந்து, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுவது கடினமான, கசப்பான உண்மை. ஆனால் இதை ஒன்றிய அரசு மறுக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது – மத்திய அரசுக்கு முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

“தமிழகத்தை பொறுத்தவரை, 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. வெகு சிலருக்குத் தான் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது” என்றும் அவர், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

மேலும், “18 முதல் 44 வயது வரை உள்ள எவருக்கும் தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் நிலைமை இதே போன்று தான் உள்ளது. பிரதமரும் சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்காமல் ஜனநாயக மாண்புகளை கேலிக்குள்ளாக்குகிறார்கள்” என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்