Aran Sei

‘டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு

டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகம் நடத்த அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி, ஒன்றிய அரசு இயற்றிய விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இன்று (அக்டோபர் 1), உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வர உள்ள இம்மனுவை, விவசாயிகளையும் விவசாய ஆர்வலர்களையும் உள்ளடக்கிய கிசான் பஞ்சாயத்து என்ற அமைப்பு சமர்பித்துள்ளது.

அம்மனுவில், டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியாகவும் வன்முறையற்ற முறையிலும் சத்தியாகிரகம் நடத்த கிசான் மகாபஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் குறைந்தபட்சம் 200 பேருக்கு இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட வேண்டும்.” என்று கோரப்பட்டுள்ளது.

‘#IStandWithFarmers’ – போராடும் விவசாயிகளின் பாரத் பந்த்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

முன்பே இக்கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வன்முறை இல்லாமல், அமைதியான முறையில் நடைபெறும் தேச தந்தை மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறையான சத்தியாகிரகத்திற்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்