Aran Sei

குடியரசு தின வன்முறை: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியரசு தினத்தன்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணியில் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, விவசாயிகள் சங்கங்கள் தலைவர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

இந்நிலையில், நேற்று (ஜனவரி 30) விஷால் தாக்கரே, அபய் சிங் யாதவ் ஆகியோர் தங்கள் வழக்கறிஞர் பிரதீப் குமார் மற்றும் சஞ்ஜீவ் மல்ஹோத்ரா வழியாக, குடியரசு தினத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மனுவில், “டெல்லியில் குடியரசு தினத்தின்போது நடந்த வன்முறைக்கு உண்மையான விவசாயிகளைக் குற்றம்சுமத்த முடியாது. டிராக்டர் பேரணியில் புகுந்த குண்டர்கள்தான் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணியைப் பயன்படுத்தி, டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு

“மனிதநேயற்ற முறையில் டெல்லி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்தச் செயல் நாடுமுழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாகச் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் பேரணியல் ஊடுருவிய குண்டர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

மேலும், “அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், டிராக்டர் பேரணி நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசும், டெல்லி காவல்துறையினரும் அளித்த அனுமதியை தவறாகச் சிலர் பயன்படுத்தி விவசாயிகளின் பெயரில் மோசமாகச் செயல்பட்டுள்ளார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ கூறியுள்ளது.

“இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்காணிப்புக் கேமிரா உதவியுடனும், மொபைல் வீடியோ உதவியுடனும் கண்டறிந்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து விசாரிக்க வேண்டும். அல்லது சிறப்பு விசாரணைக் குழு  அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாஜகவே காரணம் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

இந்த வன்முறை தொடர்பாக, 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்