Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தரவுகளை வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

ந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தால் (டிசிஜிஐ) அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் மருத்துவ சோதனை முடிவுகளின் தொகுக்கப்பட்ட தரவுகளை வெளியிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மருத்துவர் ஜேக்கப் புலியேல் சார்பில், வழக்கறிஞர் பிரசாத் பூஷண் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

”மருத்துவ சோதனை மற்றும் தடுப்பூசி தரவுகளை வெளிப்படையாக வெளியிடுமாறு மத்திய அரசு, அதன் அமைப்புகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் குறைவான எதிர்ப்பு சக்தி : இந்திய கொரோனா வகை பற்றிய முதற்கட்ட ஆய்வு முடிவு

“தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்ற கட்டளைகள், மக்கள் உடலில் என்ன ஊசி போடப்படலாம் என்பதை சுயமாக தீர்மானிக்கும் உரிமையை மறுக்கக்கூடியவை” என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் பிரசாத் பூஷன் வாதிட்டுள்ளார்.

தடுப்பூசி அனுமதியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, அவற்றின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதாக மருத்துவர், புலியேல் சார்பில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் செரில் டிசோசா தெரிவித்துள்ளார்.

‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்

தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நிகழும் பாதகமான விளைவுகள் குறித்து முதலில் தெரிவித்திருக்க வேண்டும் என பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

”ஆனால் மோசமான பின் தொடர்தல் மற்றும் தரவுகளை மறைக்கும் எண்ணம் ஆகியவற்றின் காரணமாக, தரவுகள் வெளிப்படையாக வைக்கப்படவில்லை. இதனால் பலருக்கும் இதே நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்