Aran Sei

‘கும்பமேளா மக்கள் திரளை கலைக்க வேண்டும்’ – மத்திய அரசை உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

image credit : thewire.in

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஹரித்வார் கும்பமேளாவில் உள்ள பெரும் மக்கள் கூட்டத்தை அகற்ற வேண்டும் என்றும் கும்பமேளாவில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சஞ்ஜய் குமார் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ஹரிவார் கும்பமேளாவில் கலந்துக்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படியான விளம்பரங்களை உடனடியாக நீக்க மத்திய மற்றும் உத்தரகண்ட் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை மேயர் எச்சரிக்கை

மேலும், அம்மனுவில், வாக்குபதிவின்போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்கவும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்