Aran Sei

பாஜகவை விமர்சித்ததால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூகசெயல்பாட்டாளர் – வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கொரோனா தொற்றை பசுமாட்டு சாணமோ, மூத்திரமோ குணப்படுத்தாது என்று விமர்சித்த சமூக செயல்பாட்டாளர் லேய்ச்சோம்போம் எரெண்டோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்புக்காவலில் வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மனு அவரது தந்தையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மே 13 அன்று முகநூலில் விமர்சித்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி புனித யாத்திரை நடத்தும் உத்தரகண்ட் அரசு – மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்குமோ?

இந்த மனுவில், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் கொரோனா தொற்றால் இறந்ததற்கு பின்னரே கூறப்பட்டதாகவும், எண்ணற்ற பாஜக தலைவர்கள் அறிவியல் பூர்வமற்ற முறையில் கொரோனா தொற்றை பசுமாட்டு சாணமும், மூத்திரமும் கொரோனவைக் குணப்படுத்தும் என்று வதந்தி பரப்பிய நிலையில் இந்த விமர்சனம் வைக்கப்பட்டது என்று கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில், எரெண்டோ அவர்மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குக்காகச் சில நாட்கள் மட்டுமே விசாரணைக் காவலில் இருந்ததாகவும், அப்போது அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில்,  அவர் மீண்டும்   தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்று  தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

இந்நிலையில், கடந்த மே 17 அன்று மாவட்ட நீதிபதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையைத் தள்ளுபடி செய்யவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்