Aran Sei

மாற்றுப்பாலினத்தோருக்கு தனியான பொதுக்கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

மாற்றுப்பாலினத்தோருகென்று தனியான பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் ஓய்வறைகள் கட்டித்தர வேண்டுமென  டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல  மனுவொன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக   தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், டெல்லி அரசு, புது டெல்லி  மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சிகள் ஆகியவை இந்த விவகாரம் தொடர்பாக  பதிலளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

பட்டியல் சமூக மக்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

இறுதியாண்டு சட்ட மாணவர் ஜாஸ்மின் கவுர் ச்ஹப்ரா தாக்கல் இந்த மனுவில், “ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியும் டெல்லி பகுதியில்  திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு  தனியான பொதுக்கழிப்பிடம் கட்டப்படவில்லை” என்று  குறிப்பிட்டுள்ளதாகவும்   தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும், மைசூர், போபால், லூதியானா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் அப்படியான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை  என்று அந்த மனுவில்  கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

அச்சடித்தபிறகே விற்கிறோம்; எங்களை விற்றுவிட்டு பத்திரிகையை அச்சடிப்பதில்லை – டைனிக் பாஸ்கர் நாளிதழின் புதிய விளம்பரம்

அதுமட்டுமல்லாது,” மாற்றுப்பாலினத்தோருக்கு தனியான கழிப்பிட வசதி இல்லாததால், ஆண்களின் கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பாலியல் சீண்டலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக நேர்கிறது. பாலியல் தேர்வு மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றின் காரணமாகப் பாகுபாட்டுக்கு உள்ளாவது  சட்டத்தின் முன் அனைவரும்  சமம், சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள  சம பாதுகாப்பையும் மற்றும் அரசியலமைப்பின் 14 வது பிரிவையும்  மீறுகிறது” என்றும் அந்த பொது நல மனுவில்  சுட்டிக்கட்டபட்டுள்ளதாக    தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்