Aran Sei

மேற்கு வங்க தேர்தலில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

credits : the indian express

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட இருப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக என்டிடிவி  செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல்  நடத்துவது, இந்திய அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறுவதாக கூறியுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட மெட்ரிக் பள்ளி – மாணவர்களும் பெற்றோரும் போராட்டம்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்குப் பல்வேறு கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் எனப் பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், விரைவில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கும் இந்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது மதரீதியான முழக்கங்களைக் கோஷமிட்டால் சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

நடிகை கங்கனா ரணாவத்துக்கு வாரண்ட் – பாடலாசிரியர் தொடுத்த அவதூறு வழக்கில் நடவடிக்கை

“ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட மத முழக்கங்களைக் கோஷமிடுவது ஒற்றுமையின்மையை உருவாக்கும்” என்றும், இவ்வாறு முழக்கமிடுவது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கு எதிரானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்