கொரோனா தொற்று நோய்க்க்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை பதுக்கல், லாபம் ஈட்டுதல், கலப்படம் செய்தல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்றல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்தேசிவிர் மருந்துகள் – பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா, தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்,மேலும் குற்றம்புரிபவர்களின் பினாமி சொத்துக்கள் மற்றும் முறையற்ற முறையில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வது உட்பட சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய்க்க்கான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் மீது முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 31 கீழ் தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கொரோனா நோயாளிகளுக்கான படுக்கையை பதுக்குதலாலும்,மருந்துகளை அதிக விலைக்கு விற்பதாலும் , மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் விற்பதாலும் பொருளாதார ரீதியாக பின்னடைந்தவர்களும்,வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களும் அதிகளவில் தெருக்களிலும் , மருத்துவமனை
வளாகங்களிலும்,ஆம்புலன்ஸ்களிலும் இறந்து வருகின்றனர்” என்றும் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
எனவே,சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், டெல்லியில் 899 விலையுள்ள ரெம்தேசிவிர் மருந்து 70,000 விற்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.