Aran Sei

தீவிரவாத குழுக்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுதாபம் காட்டுவதாக புகார் – வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

credits : the indian express

ட்விட்டர் நிறுவனம், தீவிரவாத குழுக்களுக்கு அனுதாபம் காட்டுகிறது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று இருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அஷ்ஸ்வானி குமார் என்ற வழக்கறிஞர், சமூக வலைதள நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில், மத்திய ரயில்வே அமைச்சகத்தின், ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் வினித் கோயங்கா தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து பின்னர் நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததாக உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை

தடை செய்யப்பட்ட மற்றும் வெறுக்கத் தக்க செய்திகளை, ட்விட்டர் நிறுவனம் ஊக்குவித்துப் பரப்பவதாகவும், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள எந்த வழிமுறையும், திட்டமும் அந்நிறுவனத்திடம் இல்லை எனவும், கோயங்கா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகதி இந்து தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அஷ்வானி குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ”ட்விட்டர் நிறுவனம் தீவிரவாத குழுக்களுக்கு அனுதாபம் காட்டுகிறது… ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகள், ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களைத் தங்களின் வெறுப்பு பேச்சு பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறது, ஏனெனில் அவற்றில் கண்டறிதல் வசதியில்லை” என தெரிவிக்கப்பட்டிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார்மயமாகும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை – பதவியை ராஜினாமா செய்த தெலுங்கு தேச சட்டசபை உறுப்பினர்

”சட்டத்திற்கு புறம்பான, போலி, வெறுப்பான செய்திகள்” பரப்படாமல் இருக்க, சமூக வலைதளங்களுக்குச் சட்டம் அல்லது விதிமுறை வகுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 3.5 கோடி ட்விட்டர் மற்றும் 35 கோடி முகநூல் கணக்குகளில், 10% போலியானவை என, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் வழியே தான் சாதி ஒழியும்: படித்த இளைஞர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள் – உச்ச நீதிமன்றம்

”தேசவிரோத ட்விட்டர் பதிவுகள் அழிக்கப்படுவதோடு, அதைப் பதிவிட்ட கணக்குகளும் முடக்கப்பட வேண்டும்” என்றும், இந்தியா அல்லது வெளிநாடுகளில், தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக அவை பயன்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கூறியிருப்பதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசவிரோத மற்றும் பரப்புரை ட்விட்டுகளுக்கு, ட்விட்டர் நிறுவனம் பெற்ற விளம்பர தொகையைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப அரசாங்கம் அதிக அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்