ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிய உச்சநீதிமன்றம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்
ரோஹிங்கிய அகதி சலீமுல்லா என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ” ரோஹிங்கிய அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அரசின் முடிவானது இந்திய அரசியல் சாசன பிரிவு 21 ஐ மீறுகிறது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்
கடந்த மார்ச் 8 அன்று 168 ரோஹிங்கிய அகதிகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்தது பின் அவர்களை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வ்ருகின்ற மார்ச் 25 அன்று இந்த மனு உச்சநீதிமன்ற அமர்வால் விசாரிக்கப்படவுள்ளது.
SOURCE: THE INDIAN EXPRESS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.