Aran Sei

மதுராவில் மசூதியை அகற்றகோரி மற்றொரு வழக்கு – விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்

credits : PTI

மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, ஷாஹி இத்கா மசூதியில் இருக்கும் கோயிலின் அடையாளங்களை அகற்ற கோரி, மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் இடமும், கிருஷ்ண ஜென்ம பூமியென அழைக்கப்படும் மதுரா கோவிலும் (கேசவ தேவ கோயில்), ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் அருகில் உள்ள மசூதியை (ஷாஹி இத்கா மசூதி) ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டியால் நிர்வகிக்கப் பட்டுவருகிறது.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்

இவ்விரண்டிற்கும் இடையே கடந்த 1968-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, கோவிலும் மசூதியும் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அருகருகில் அமைந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, தற்போது செயல்பாட்டிலிருந்து வருகிறது.

பொதுச்சொத்து விற்பனை – ரயில் நிலையங்கள் முதல் மைதானங்கள் வரை – 8 அமைச்சகங்களின் பட்டியல்

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி 1968-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் தன்னிடமே ஒப்படைக்கக் கோரியும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற மனுத்தாக்கல் – பதிலளிக்க கோரி மசூதி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

அந்த மனுவில், கோயில் மற்றும் மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலம் தன்னுடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்றும் 1968-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்த முழு நிலத்தையும் தன்னிடமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

மேலும், ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டி, கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் மசூதியைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

ரோகிங்கியா அகதிகள் – ஜம்மு கைதுகளை எதிர்த்து டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் ஷுக்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஷாகி ஈத்கா மசூதி நிர்வாகம் மட்டுமின்றி, லக்னோ சன்னி வக்பு வாரியம், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளையுள்ள கத்ரா கேசவ் தேவ் கோயில், ஸ்ரீ கிருஷ்ணா சேவா சனஸ்தான் ஆகியவற்றுக்கும் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 

மதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற வேண்டும் : நீதிமன்றத்தில் மனு

அந்த மனுவில், ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டியின் உறுப்பினர்கள் மசூதியில் இருக்கும் கோயிலின் அடையாளங்களை அகற்ற கோரியுள்ளார்.

இரண்டாண்டுகளில் அலட்சியத்தால் கொல்லப்பட்ட 421 தொழிலாளர்கள் : குஜராத் அரசு ஒப்புதல்

இந்த மனு, முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் இணைக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மசாஜ் பார்லர், ஸ்பாக்களில் துப்பாக்கிச் சூடு – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி

மதுராவில் அமைந்துள்ள மசூதியை அகற்றக்கோரி இந்து மற்றும் வலது சாரி அமைப்புகள் பல்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்தாலும் மதுரா சிவில் நீதிமன்றம் பெரும்பாலான மனுக்களைத் தள்ளுபடி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்