Aran Sei

ஸ்டான் ஸ்வாமிக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – 2500 சமூக செயல்பாட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம்

பீமாகோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கு எதிராக 2500க்கும் மேற்பட்ட  மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் மத்திய புலனாய்வு துறைக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீமாகோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாகக் கடந்த அக்டோபர் 8 அன்று ஸ்டான் ஸ்வாமி மத்திய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டார்.

பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு

இந்நிலையில், கடந்த (மார்ச் 22) ஸ்டான் சுவாமியின் பிணை மனுவை விசாரித்த தேசியப் புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி டி.இ.கோத்தலிகர் பிணை பெறுவதற்கு சட்டரீதியாக மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்க முடியாது என நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக 2500 க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்களும், கலைஞர்களும், வழக்கறிஞர்களும் ஒன்றிணைந்து ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை கடிதத்தை தேசிய புலனாய்வு முகமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

பழங்குடியின செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமியின் மீதான இந்த வழக்கு போலியான ஆவணங்களால் புனையப்பட்டது. அந்தப் போலி ஆவணங்களையே காரணமாகக் கூறி பிணை மறுக்கப்படுகிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

“சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் தண்டிக்கப்பட்டவர்களின் விகிதம் மிகவும் குறைவு. ஏனென்றால், போதிய ஆதாரங்கள் இல்லாமல் புனையப்பட்டதே அதற்கு முக்கியக்காரணம் எனக் சமூக செயல்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று 83 வயதான ஸ்டான் ஸ்வாமியின் மீது புனையப்பட்ட இந்த வழக்கிலிருந்து உடனடியாகப் பிணை வழங்கப் பட வேண்டும்” என்று 2500க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்