தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரனோ தொற்றுக்கால நடவடிக்கைகளை பின்பற்றாத வேட்பாளர்களை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று இந்த மனுமீதான விசாரணையின் மீது மத்திய அரசும் ,இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் – விவசாய சங்கம் அறிவிப்பு
இந்த மனுவில் தேர்தல் பரப்புரையின்போது பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றுவது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.
மேலும் அந்த மனுவில்,கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்க வேண்டும் எனற் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை – விடுதிகளில் அடைத்துவைக்கப்படும் வேட்பாளர்கள்
கொரோனா தொற்றுக் காலத்தில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்திருந்த போதும் வேட்பாளர்கள் சரிவரப் பின்பற்றப் படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், மத்தியஅரசிற்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் , மேலும் இந்த மனு அடுத்து வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரிக்கப் படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.