Aran Sei

பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றமல்ல என உச்சநீதிமன்றத்தில் மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பிச்சையெடுப்பது சட்டவிதிமீறிய குற்றமாகாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும்,நான்கு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

 

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சில மாநில அரசுகள் பிச்சையெடுப்பது குற்றம் என விதிவகுத்திருப்பதாகவும் இது இந்திய அரசியல் சாசனப்பிரிவு 21  வாழ்தல் உரிமைக்கு ஏதிராக உள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9 அன்று, நீதிபதி அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி அமர்வு, இதுகுறித்து மத்திய அரசுக்கும், மகராஷ்டிரா, குஜராத், பீகார், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

`லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பிச்சைக்காரர்கள்’ – உயர்நீதி மன்ற மதுரைக் கிளை

 

கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 4,13,670  பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை

 

மேலும், இந்த மனுவில் பிச்சையெடுப்பது சட்டவிரோத குற்றம் என இந்திய மாநிலங்களில் உள்ள விதிகளைச் சட்டவிதிமீறியவையாக உத்தரவிட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்