புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் இந்திய வீரர்கள் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது இருபது தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், இரு அணி வீரர்களுக்கும் வெளியே தனியாக எங்கும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களை நேசித்த மாபெரும் விளையாட்டு வீரன் மரடோனாவுக்கு அஞ்சலி
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், பிரித்விஷா, நவ்தீப் ஷைனி, ஷூப்மான் கில் ஆகிய 5 பேர் தடையை மீறி ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து, ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் “இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்படி, புத்தாண்டு தினத்தன்று இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ஷூப்மான் கில், ஷைனி, ரிஷப்பந்த் ஆகியோர் வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,”பயிற்சிக்குச் செல்லும் போது இந்த 5 வீரர்களும் தனிமையாகச் செல்வார்கள், பயிற்சியில் ஈடுபடுவார்கள். பிக்பாஷ் லீக்கில் இதுபோன்று இரு வீரர்கள் விதிமுறைகளை மீறியதால், தனிமைப்படுத்தப்பட்டனர்” என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“ இந்திய வீரர்கள் சிலர் ஹோட்டலில் உணவு உண்டது உண்மைதான். ஆனால், அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றித்தான் சென்றுள்ளார்கள். அவர்கள் முறையாக உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உணவு சாப்பிட்டார்கள். இதை பெரிதுபடுத்த தேவையில்லை.” என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் கரைந்த மொழி : அப்துல் ஜப்பார் என்ற ஊடக அடையாளம் மறைந்தது
இந்திய வீரர்களுடன் செல்பி எடுத்த ரசிகர் நவால்தீப் சிங் பதிவிட்ட விளக்கத்தில், “ ஹோட்டலில் இந்திய வீரர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்களுடன் புகைப்படம் எடுத்தேன். ஆனால், ரிஷப்பந்தை கட்டித்தழுவவில்லை. சமூக விலகலைப் பின்பற்றித்தான் இருந்தோம். தவறான தகவலை முன்புநான் பதிவிட்டமைக்கு மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.