Aran Sei

பிறர் உயிரைக் காக்க பிளாஸ்மா தானம் செய்தவரின் தாய் உயிரிழப்பு – மருத்துவமனையில் இடமில்லாததால் நேர்ந்த அவலம்

கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காக்க இரண்டு முறை பிளாஸ்மா தானம் செய்தவரின் தாய் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யூசுப் என்ற அந்த இளைஞர், ஒரு கையில் பிளாஸ்மா தானம் செய்ததற்கான சான்றிதழும், மற்றொரு கையில் தன் தாயின் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதற்கான சான்றிதழையும் எடுத்துக்கொண்டு, அவர் 2 நாட்களாக டெல்லியில் உள்ள 6 மருத்துவமனைகளில் இடம் கேட்டு அலைந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, சாமானியர்கள் என்ன செய்வார்கள்” – பாஜக முன்னாள் எம்.பி ட்விட்டரில் கருத்து

இந்நிலையில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால், அவரின் தாய் சிபாலி பேகம் கடந்த ஏப்ரல் 25 அன்று உயிரிழந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யூசுப், “மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தான் நான் இரண்டு முறை பிளாஸ்மா தானம் செய்தேன். ஆனால் எனக்கு உதவி தேவைப்படும்போது எல்லோரும் எங்கு சென்றார்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

கடந்த நவம்பர் மாதம் ஊரடங்கு காரணமாக யூசுப் பணிபுரியும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டநிலையில், செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், பொருளாதார சுமையில் இருந்த போதும், இரண்டு முறை பிளாஸ்மா தானம் செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யூசுபின் தாய் மரணம்குறித்து, டெல்லியில் உள்ள  ஈசிக் மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஜீவன் ஜோதி மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை மற்றும் யமுனா விளையாட்டு வளாகம் ஆகிய மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தபோது, பேகம் மட்டுமில்லாமல், படுக்கை வசதியும் ஆக்சிஜன் வசதியும் இல்லாததால் எண்ணற்ற நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – அதிகரித்து வரும் உயிரிழப்புகள்

இதே போன்று, தயானந்த் மருத்துவமனையின் அதிகாரி , “பேகம் அழைத்து வரப்பட்டபோது எந்த மருத்துவர் பரிசோதித்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அப்போது ஐ.சி.யுவில் இடம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்