Aran Sei

‘கிறிஸ்தவ மக்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்கின்றன’ – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆழ்ந்த கவலை

ந்தியாவை தாய்நாடாகக் கொண்ட சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ மக்கள் மீது இந்துத்தவ வெறியர்களால் நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் கிறிஸ்தவ சமூகத்தின் மீது வலதுசாரி தீவிரவாத இந்துத்துவ குண்டர்கள் தாக்குதல்கள் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. 1998 ஆண்டுக்கு முன் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவரின் இரண்டு சிறுவயது மகன்கள் பஜ்ரங்தள் குண்டர்களால் உயிரோடு கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டது முதல், ஒடிசா கந்தமால் கலவரத்தில் இரு அப்பாவி கிறிஸ்தவர்கள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டது வரை சுதந்திர இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்கள் என்பதை மறக்க இயலாது. 1998 ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது இப்போது 2014 ஆண்டில் மோடி ஆட்சியைக் கைப்பற்றிய பின் தொடர்கதையாகி விட்டது. இது மிகவும் ஆபத்தானது மட்டுமில்லாமல் மிகவும் கலக்கமடையச் செய்வதாகவும் உள்ளதாக பைஸி தம் கவலையைத் தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயண பிரச்சினையை பாஜக அண்ணாமலை திசைதிருப்புகிறார் – சு.வெங்கடேசன் சாடல்

தேசிய சிறுபான்மை ஆணையம் தகவலின்படி, 1998 ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் கிறிஸ்தவ சமூகத்தின் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வந்துள்ளது என்பது அறியவருகிறது. அகில இந்திய கிறிஸ்தவ சபையின் அறிக்கையின்படி 36 மணி நேரத்தில் ஒரு தாக்குதல் கிறிஸ்தவர்கள் மீது நிகழ்த்தப்படுகிறது.

இவ்வாண்டில் மட்டும் நாடெங்கிலும் உ.பி. மாநிலத்தில் 80 தாக்குதல்கள் தொடர்ந்து சத்தீஷ்கர், ஹரியானா, மத்திய பிரதேஷ், உத்தரகண்ட், டெல்லி, கர்நாடகா மற்றும் கேரளா வரை கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து 300க்கும் அதிகமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

வலதுசாரி இந்துத்துவ தீவிரவாத சக்திகளால் தூண்டப்பட்டு மதவெறுப்பைத் தூண்டும் தாக்குதல்களே இவை. ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தாந்தவாதி கோல்வால்கர் கிறிஸ்தவர்களை பாரதமாதாவின் ‘உள் எதிரிகள்’ என்று வரையறை செய்துள்ளார்.

பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் – பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விஜயதசமி அன்று உரையாற்றுகையில், “நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் நிகழும் சட்டவிரோத குடியேற்றமும், வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் மதமாற்றங்களும் மக்கள் தொகையின் அளவீட்டை மேலும் மாற்றக்கூடியது”, என்ற வார்த்தைகள் அவரின் தொண்டர்களுக்கு ‘நாட்டின் இரண்டாவது எதிரி’ என்று கூறி கிறிஸ்தவசமூகத்தை கருவறுக்க ஊக்கமளிப்பதாக உள்ளது. இதன் பிறகுதான் நாடெங்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீதான கொடுந்தாக்குதல்கள் அதகரித்தன.

‘ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது’- நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

நாட்டில் பெருகிவரும் ஆபத்தான மதவெறுப்புணர்வையும், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, பாசிச சக்திகள் தம் அராஜகப் போக்கை நிறுத்திக்கொள்ள எச்சரிப்பதோடு, நாட்டில் மக்கள் அமைதியாக வாழ அனுமதிக்கவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்