Aran Sei

மத வழிபாட்டுச் சட்டம் கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது: விஷ்வ இந்து பரிஷத் கருத்து

ந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947 தேதி அன்று இருந்ததைப் போலவே அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதிக்குப் பொருந்தாது என்று விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

மசூதியின் வெளிப்புற சுற்றுச்சுவரில் இந்து கடவுளின் உருவம் இருப்பதால், வழிபட உரிமை கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம். மசூதியை ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்த குழு ஒன்றை நியமித்திருந்தது.

மூன்று நாள் ஆய்வுப் பணிகள் நேற்று (மே 16) முடிவடைந்த நிலையில், ஆய்வின்போது மசூதி வளாகத்தில் உள்ளே இருக்கும் சிறிய நீர்த்தேக்கத்தின் (வஸூக்கானா) அருகில் சிவலிங்கம் காணப்பட்டது என்று அந்த குழு தெரிவித்துள்ளது. அதனை ஏற்ற நீதிமன்றம் அங்கு யாரும் செல்ல முடியாதபடி அந்த பகுதியைச் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

சிவலிங்கம் காணப்பட்டது என்ற கூற்றை மறுக்கும் மசூதியின் நிர்வாகக் குழுவின் செய்தித் தொடர்பாளர், “சிவலிங்கம் என்று கூறப்படுவது நீரூற்றின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார். சீல் வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் முன்னரே மசூதி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை முழுமையாகக் கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே 1947க்கு முன்பு அதுவொரு கோயிலாக்கத்தான் இருந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு முதல் இந்துக்கள் அந்த மசூதியில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆகவே அதனை கியானவாபி மந்திர் என அழைக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இழப்பே போதும், இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை: கியான்வாபி மசூதி தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து

“இந்த இடம் இப்போதும் ஒரு கோயிலாகத்தான் உள்ளது. 1947 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இங்குப் பூஜை செய்து வருகிறோம். இதனை நாங்கள் ஒரு மந்திர் என்றுதான் நம்புகிறோம். ஆதலால் மத வழிபாட்டுச் சட்டம் இங்குப் பொருந்தாது” என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் சித்தார்த் நாத் சிங், “பாபர் மசூதி சர்ச்சையின் உச்சக்கட்டத்தில் சிறுபான்மையினரில் ஒரு பிரிவினரை திருப்திப்படுத்துவதற்காக காலனித்துவ ஆட்சியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட 1947 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்? காங்கிரஸ் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

இது தொடர்பாக அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவாபி ஒரு மசூதி, அது மசூதியாகவே இருக்கும். அதைக் கோவில் என்று சொல்வது, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியே தவிர வேறில்லை. இது அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.

“இந்தக் கொடுமையை இஸ்லாமியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இந்த அநீதிக்கு எதிராக ஒவ்வொரு நிலையிலும் போராடும்,” என்று இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் காலித் சைபுல்லா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்