Aran Sei

’வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன்’ – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Image Credits: The Print

வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திற்கு செல்ல முயன்றபோது அவர் வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தின் தரால் நகரில் ஒரு குடும்பத்தை ராணுவத்தினர் தாக்கியத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணி காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்ல மெகபூபா முப்தி திட்டமிட்டிருந்தார்.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

குப்கார் சாலையில் உள்ள அவரது வீட்டின் வாயிலில் பாதுகாப்பு படை வாகனங்கள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மெகபூபா, “தரால் பகுதியில் ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினரை சந்திக்க முயன்றபோது வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன். இது தான் காஷ்மீரில் உண்மையான நிலை என்று இங்கு ஆய்வுக்கு வரும் வெளிநாட்டினருக்கு காட்ட வேண்டும். இந்திய அரசு கட்டமைக்கும் சுற்றுலா பயணங்கள் அல்ல” என தெரிவித்துள்ளார்.

குடிமைப் பணித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோரை விட மிகக் குறந்த மதிப்பெண்ணில் தேர்வாகும் முன்னேறிய வகுப்பினர் – கேள்விக் குறியாகிறதா சமூகநீதி?

முன்னதாக செப்டம்பர் 28  ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்த மெகபூபா, “தரால் கிராமத்தின் யக்வானி முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், அதே பகுதியில் இருக்கும் வீடுகளைச் சேதப்படுத்தி, மக்களைத் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள கிராமத்தினரை காவல்துறையினர் ராணுவத்தினர் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Source : The Hindu 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்