Aran Sei

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

டந்த மார்ச் 7 அன்று கடத்தல் வழக்கு தொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்வினையாற்றியுள்ளார்.

தங்க கடத்தல் வழக்கில் நடந்த சாட்சிகளின் மர்ம மரணங்கள்குறித்து அமித்ஷா குற்றம்சாட்டி இருந்ததற்கு கண்ணூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பினராயி விஜயன் தக்கபதிலடி கொடுத்துள்ளாரென தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘வளர்ச்சி நிதியில் சோனியா காந்தி குடும்பத்திற்கு பங்கா? நிரூபிக்கா விட்டால் அவதூறு வழக்கு’ – அமித்ஷாவுக்கு எச்சரிக்கை

இந்தப் பிரச்சாரத்தின்போது பேசிய பினராயி விஜயன் மாநில அரசு தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கத் தயாராக உள்ளது என்றும், ஆனால்  இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறைக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறைகள்: உளவுத்துறையின் தோல்விக்கு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

“யார் கொடூரமான குற்றங்கள் புரிந்தார்களோ அவர்கள் சிறைக்கு செல்வார்கள், நீங்கள் அது போன்ற குற்றத்தை நிறைய பார்த்தவர்” என்று அமித்ஷாவின் குற்றச்ச்சாட்டுக்கு பினராயி விஜயன் எதிர்வினையாற்றியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

அமித்ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பிய நீதிபதி குரேஷி – உச்சநீதிமன்ற நியமனங்கள் முடக்கம்

சொராபுதினை போலி என்கவுண்டர் செய்த வழ்க்கின்  குற்றப்பத்திரிகையில் அமித்ஷா பெயர் இருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த வழக்கில் இறந்த நீதிபதி லோயா குறித்து பாஜக தலைவர் ஒருவராவது பேசிருக்கிறீர்களா எனவும் பினராயி விஜயன் கேள்வியெழுப்பியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்ககடத்தல் வழக்குகுறித்து பதிலளித்த பினராயி விஜயன் “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருவனந்தபுரம் விமான நிலையம் தங்கக்கடத்தலின் மையமாக மாறியிருக்கிறது என்றால், உண்மையில் யாருக்காகக் கடத்தப்பட்டது என்று நிரூபிக்கத் தயாரா ? கடத்தப்பட்டதெல்லாம் உங்கள் நண்பர்களுக்காகதான்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்