கேரள மாநிலத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், “பாலின சமத்துவ கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் வகையில், கேரள பள்ளிக்கல்வி பாடப்புத்தகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள சொற்கள் மற்றும் பத்திகள் மறுஆய்வு செய்யப்பட்டு நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
All the States including our state should start doing this. https://t.co/4BNWvj1S1E
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 24, 2021
மேலும், ” பாலின சமத்துவம் மற்றும் சமஉரிமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.