Aran Sei

கன்னியாஸ்த்ரிகளை மிரட்டிய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் : ’தேசத்தின் நன்மதிப்பை கெடுக்கிறார்கள்’ – பினராயி விஜயன்

credits : PTI

ஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள், கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்த்ரிகளை மிரட்டிய சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி, கேரளாவின் சைரோ மலபார் தேவாலயத்தின் கீழ் செயல்படும் சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட்டைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்த்ரிகளும், அந்தத் தேவாலயத்தில் புதிதாக இணைந்துள்ள இரண்டு பெண்களும், உத்கல் அதிவேக ரயிலில் டெல்லியிலிருந்து, ஒடிஷா நோக்கிச் சென்றுள்ளனர். கன்னியாஸ்த்ரிகள் இருவரும் மத உடையிலும், புதிதாக இணைந்துள்ள பெண்கள் சாதாரண உடையையும் அணிந்துள்ளனர்.

சேக்ரட் ஹார்ட்சில் புதிதாக இணைந்துள்ள பெண்கள் இருவரும் ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அங்குச் சேர்ந்த பின் முதல்முறையாக ஒடிஷா செல்வதால், இரண்டு கன்னியாஸ்த்ரிகள் அவர்களுக்குத் துணையாகச் சென்றுள்ளனர் எனவும் தி நியூஸ் மினிட்டின் செய்தி கூறுகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இதையடுத்து, உத்தரகாண்ட் ரயில் நிலையத்தில் ஏறிய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள், கன்னியாஸ்த்ரிகளுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்த்ரிகள் வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று மதமாற்றம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரானது. இந்தச் சம்பவத்தின்போது 150க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ரயில் நிலையத்தில் கூடியுள்ளனர்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

அவர்களுடைய மிரட்டலால் கன்னியாஸ்த்ரிகள் ஜான்சி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு காவல்துறையால் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் விசாரிக்கப்பட்டுள்ளனர். பின்னர், அவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை என்பது தெரிந்தத பின்னர், அவர்கள் வேறொரு ரயிலில் ஒடிஷாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

இந்தச் சம்பவத்திற்கு சைரோ மலபார் தேவாலயம் உட்பட பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ”இது போன்ற சம்பவங்கள் தேசத்தின் நன்மதிப்பையும், நமது பழங்கால பாராம்பரியங்களான மதசகிப்புத்தன்மை மற்றும் நடைமுறைகளையும் கெடுக்கின்றன” என்றும் “இது போன்ற சம்பவங்களை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

மேலும், ”அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள தனி நபர் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவித்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்