Aran Sei

ரெம்தேசிவிர் தடுப்பு மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்க அனுமதி வழங்கவேண்டும்- உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

 

ரெம்தேசிவிர் தடுப்பு மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்க அனுமதி வழங்கவேண்டுமெனக் கோரி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ரெம்தேசிவிர் தடுப்பு மருந்து ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

’ரெம்தேசிவிர் மருந்து செலுத்த புதிய விதி: ‘மக்கள் சாக வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது – நீதிமன்றம் குற்றச்சாட்டு

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்தான ரெம்தேசிவிர் தடுப்பு மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்க அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா  செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ரெம்தேசிவிர் தடுப்பூசிகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி – மத்திய அரசு முடிவு

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் அடங்கிய அமர்வு,”ரெம்தேசிவிர் தடுப்பு மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்பது குறித்து  மத்திய சுகாதாரத்துறை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் மற்றும் வெளிநாட்டு வணிகத் துறையின் முதன்மை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்