Aran Sei

பெகசிஸ் விவகாரம்: ‘உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு’ – உச்ச நீதிமன்றத்தில் மனு

த்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரையும் இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகசிஸைப் பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள் கண்காணித்ததாக கூறும் அம்னெஸ்ட்டி மனித உரிமை அமைப்பின் ஆய்வு முடிவுகள் குறித்து எழுந்த சர்ச்சைகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா அளித்த மனுவில், “பெகசிஸ் ஊழல் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்திய ஜனநாயகம், நீதித்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பின் மீது நிகழ்த்தப்பட்ட கடுமையான தாக்குதல். வரம்புகளை மீறிய இந்தக் கண்காணிப்பை தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது.

பெகசிஸ் ஸ்பைவேர்: உச்சநீதிமன்றத்தின் தலைமையில் சுதந்திரமான விசாரணை வேண்டும் – இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

தனிமனித அந்தரங்கம் என்பது ஒன்றை மறைத்து வைத்துக்கொள்வதல்ல. நம்முடைய தனிப்பட்ட  எண்ணங்களும் செயற்பாடுகளும், வேறொருவரின் நோக்கங்களின் கருவியாக மாற்றப்படாமல் இருக்க வேண்டும். இது கண்ணியத்தின் முக்கியமான அம்சம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகசிஸை பயன்படுத்தி கண்காணிப்பது என்பது, ஒருவரின் தொலைபேசி உரையாடல்களைக் கேட்பது மட்டுமல்ல, மாறாக ஒருவரின் முழு டிஜிட்டல் வாழ்க்கையையும் அணுக இதை பயன்படுத்தலாம் . ஏனெனில், இது தொலைபேசியின் உரிமையாளரை மட்டுமல்ல, அவருடன் தொடர்பிலுள்ள அனைவரையும் பாதிக்கிறது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

மேலும், “2016 ஆம் ஆண்டு தொடங்கி, இதுவரை சுமார் 50,000 தொலைபேசி எண்கள் பெகசிஸ் ஸ்பைவேரை தயாரித்த நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. பெகசிஸ் ஒரு கண்காணிப்பு கருவி மட்டுமல்ல. இந்திய அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு சைபர் ஆயுதம் இது. ஒருவேளை இது அங்கீகாரம் பெற்றே செயல்பட்டிருந்தாலும், இது தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்குவதற்கும், பெகசிஸ் ஸ்பைவேரை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்