Aran Sei

கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு

கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே விலைக்கு விற்கப்பட அந்நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 24 அன்று, வழக்கறிஞர் பாயஸ் கான் மற்றும் மூன்று சட்டம் படிக்கும் மாணவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கொரோனா தடுப்பூசி அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில் அதன் விற்பனை மற்றும் மேலாண்மை தனியார் நிறுவனத்தின் கைகளில் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குப்பை போன்ற பொதுநலமனுக்களை தாக்கல் செய்யாமல் இருந்தாலே நீதிமன்றம் சிறப்பாக செயல்படும் – சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவலில் தொற்றினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் பயன்படுத்தி பகாசுர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயித்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “கொரோனா இரண்டாம் அலையில் மொத்த நாடும் மிகமோசமான நிலையில் சிக்கித் தவிக்கும் சூழலில் தடுப்பூசிகளுக்கு  விலை நிர்ணையிப்பதை அரசு  தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவேண்டும், அதன்வழியாகவே மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களின் இது போன்ற மிரட்டல்களை தவிர்க்க முடியும்” என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மதமாற்றத்தைத் தடுக்க பாஜக வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு – மனுவை ஏற்க மறுத்து எச்சரித்த நீதிபதி

இந்த மனு குறித்து தெரிவித்த மனுதாரர்கள், பாஜக ஆளாத மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி வழங்காமல், வெளிச்சந்தையில் அதிக விலையில் மாநில அரசுகள் பெறுமாறு மத்திய அரசு திட்டமிட்டே நடந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய நிறுவனங்கள் நிர்ணயித்த விலையை தள்ளுபடி செய்து ஒரே விலையாக ரூபாய் 150 நிர்ணயிக்க உத்தரவிடவேண்டுமென அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

source; the hindu

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்