Aran Sei

கர்நாடகாவில் நவராத்திரி விழாவிற்கு காவி சால்வை அணிந்த காவல்துறையினர் – எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கண்டனம்

ர்நாடகா மாநிலம் விஜயபுரா காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், காவி சால்வை அணிந்து விஜயதசமி விழா கொண்டாடியதற்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜயபுரா காவல் நிலையத்திற்கு முன்பாக காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் மற்றும் காவலர்கள் வெள்ளை நிற குர்தா, காவி சால்வை அணிந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கர்நாடகா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநாட்ட முடியாததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

”இது யோகி ஆதித்யநாத் காட்டு ராஜ்ஜியம் நடத்தும் உத்திரபிரதேசத்தில் அல்ல. நல்ல நிர்வாகத்தை வழங்கும் பாரம்பரியத்தை கொண்ட கர்நாடகாவில் நடந்துள்ளது” என சித்தராமையா அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

”நீங்கள் ஏன் காவல்துறையினரின் உடைய மட்டும் மாற்றினீர்கள். அவர்கள் கையில் கொடுத்துத் திரிசூலத்தை கொடுத்து வன்முறையில் ஈடுபடச் சொல்லுங்கள். உங்களது கனவான காட்டு ராஜ்ஜியம் நனவாகும்” என முதலமைச்சரிடம் சித்தராமையா கூறியுள்ளார்.

“வன்முறையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நியாயப்படுத்தை தொடர்ந்து, காவல்துறையினர் சட்டத்தைக் காவல்நிலையத்தில் வைத்துப் பூட்டிவிட்டு, காட்டாட்சியை வழங்க வீதியில் இறங்கியுள்ளார்கள். மக்கள் அவர்களின் வீடுகளிலேயே இருப்பது, அவர்களுக்கு நல்லது” என அவர் தெரிவித்துள்ளார்.

”ஒருபுறம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இளைஞர்களைத் துன்புறுத்துகின்றனர். மறுபுறம் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளை விடுவிக்கக் காவல்நிலையத்திற்குள் புகுந்துள்ளார். மற்ற இடங்களில் திரிசூலங்கள் பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டு, வன்முறைக்கான அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்து முதலமைச்சரிடம் இருந்து வெளிப்படையான ஆதரவை பெறுகின்றன. மாநிலத்தில் ஆட்சி நடக்கிறதா? என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பட், ”பண்டிகை நாட்களில் காவல்துறையினர் பாரம்பரிய உடைகள் அணிவார்கள். ஒற்றுமையை வெளிப்படுத்து விதமாக ஒரே வண்ண ஆடைகளை அணிந்துள்ளனர். கேசரி நிறத்தில் ஆடை அணிவதில் என்ன தவறு இருக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “சித்தராமையாவை எடுத்துக் கொண்டால், திப்பு சுல்தான் பிறந்தநாளில் கையில் வாளை ஏந்தியிருப்பார். மசூதிக்குச் செல்லும் போது இஸ்லாமியர்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருப்பார். இதை நீங்கள் மதசார்பற்ற, மத நல்லிணக்க நடவடிக்கை என்று அழைப்பீர்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் அவர்களைப் போன்றவர்கள் அனைவர்களையும் சமநிலையில் பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாதக் உடுப்பியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, “பொதுவாக காவல்துறையினர் விசேச தினங்களில் பாரம்பரிய உடை அணிவார்கள், ஆயுத பூஜை தினத்தன்றும் அதைத் தான் செய்தனர். அவர்கள் அணிந்திருந்த உடையில் தவறில்லை” என தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்