கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் ஒரு நாளைக்கு 2 டாலர் அல்லது அதற்குக்கும் குறைவாக ஊதியம் பெறும் ஏழைகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாக ‘பியூ ஆய்வு மையம்’ ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
‘ஏழை மக்களே பெரும்பாலும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்’ – உலக வங்கி அறிக்கை
கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளினால் உலகளவில் மக்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில் எண்ணற்ற மக்கள் நடுத்தர வர்க்க நிலையிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளார் அல்லது ஏழைகளாக மாறிருக்கின்றனர். குறிப்பாக உலகளவில் ஏற்பட்ட இந்தத் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில் பியூ ஆய்வு மையம் இதுகுறித்து இந்தியா மற்றும் சீனா நிலைகளை ஆராய்ந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் ,கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அதாவது கடந்த 2020 ஜனவரி அன்று, உலகவங்கியின் புள்ளிவிவரப்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதமானது 5.8% மாக இருந்தது ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டு சரியாக ஓர் ஆண்டு கழித்து, ஜனவரி 2021 அன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியானது -9.6% மாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனாவிற்கு பின்னர் குறைந்தபட்ச வருமானம் ($2.01-10) பெறக்கூடியவர்களின் எண்ணிக்கையில் 3.5 கோடி பேர் குறைந்துள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையில் 3.2 கோடி பேர் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு
மேலும், 7.5 கோடி பேர் 150 ரூபாய்க்கும்($2)குறைவாக ஊதியம் பெறக்கூடிய ஏழைகளாக மாறியுள்ளதாகவும் , $50 டாலருக்கும் அதிகமாக ஊதியம் பெறக்கூடியவர்களில் 10 லட்சம் பேர் அந்த வரம்பிலிருந்து வெளியேறிருப்பதாகவும், $20.01-50 ஊதியம் பெறக்கூடியவர்களில் 70 லட்சம் பேர் குறைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் 7.5 கோடி பேர் ஏழைகளாக மாறியுள்ளதால் உலக வறுமையில் ஏறத்தாழ 60% உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு முன் இந்தியாவில் 9.9 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினராக இருந்தனர் ஆனால் கொரோனா தொற்றிற்கு பின் அதில் மூன்றில் ஒரு பகுதி குறைந்து 6.6 கோடி பேர் தற்போது நடுத்தர வர்க்கத்தினராக உள்ளதாக பியூவின் அறிக்கை கூறியுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு : ஏழை வயிற்றிலடிக்கும் மத்திய அரசு – திருமாவளவன் குற்றச்சாட்டு
இதே போன்று, கொரோனாவிற்கு முன் 5.9 கோடியாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக 13.4 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2011 முதல் 19 ஆம் ஆண்டுவரை 340 கோடியாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கையானது 7.8 கோடி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 7.5 கோடியாக ஏழைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இதைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகுமெனவும் ‘பியூ ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
source; PEW RESEARCH CENTER
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.