Aran Sei

137 நாட்களுக்கு பின் உயர்த்தப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை – சமையல் எரிவாயு விலை ரூ 50 உயர்வு

Image credit : thehindu.com

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 137 நாட்களுக்குப் பிறகுபிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 4 தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடந்து 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் 137 நாட்களாக மாற்றமடையாமல் இருந்தது.

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

இந்நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ 50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 96.21 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 86.67ஆகவும் உள்ளது. மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 949.50 ஆக உள்ளது.

பீகார்: உலகின் பெரிய இந்துக் கோவிலை கட்ட ரூ.2.5 கோடி நிலத்தை கொடையாக அளித்த இஸ்லாமியர்

மேலும், தொழில்நிறுவனங்களுக்கான டீசலின் மொத்த கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 25 ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

Source: Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்