Aran Sei

எரிபொருள் மீதான வாட் திரும்பப் பெற வேண்டும் – வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநில பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 10) நடந்த இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 7,000 எரிப்பொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேவேளை, எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மட்டும் செயல்பட்டுள்ளன.

“வரிவருமானம் குறையுமென்பதால், 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வராது” – சுஷில் குமார் மோடி

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக, ராஜஸ்தான் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுனீத் பகாய் கூறுகையில், “கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தொடங்கியபோது, மாநில அரசு மதிப்புக்கூட்டு வரியை (வாட்) உயர்த்தி, கூடுதல் வருவாயை ஈட்டிக்கொண்டது. ஆனால், மாநிலத்தில் விற்பனை அளவானது 34 சதவீதம் குறைந்தது. ஏனென்றால், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டால் ராஜஸ்தானில் எரிபொருள்களின் விலையானது அதிகமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, எங்கள் சங்கம் இது தொடர்பான கோரிக்கை மனுவை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம் என்றும் இதற்கு, அரசிடமிருந்து சாதகமான முடிவு எதுவும் கிடைக்காவிட்டால், ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுனீத் பகாய்எச்சரித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்