Aran Sei

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு தயாராகும் திரிணாமுல் – என்ன செய்ய காத்திருக்கிறது?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கொரோனா தொற்று பரவலை தடுக்காதது, விவசாய சட்டங்கள் மற்றும் கூட்டாசி கட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகள் ஆகிய பிரச்சனைகளை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள்  எழுப்புவோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 13), பிடிஐ-யிடம் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கொரோனா தொற்று பரவலை தடுக்காதது, விவசாய சட்டங்கள் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகள் ஆகிய பிரச்சனைகள் கூட்டத்தொடரில் நாங்கள்  எழுப்புவோம். ஒன்றிய அரசின் கொண்டுவந்துள்ள பல மக்கள் விரோதக் கொள்கைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த பிரச்சினைகளையும் நாங்கள் எழுப்புவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கூட்டங்களால், கூட்டாட்சி முறையே சிதைகிறது’ – மேற்கு வங்க அமைச்சர் நிதியமைச்சர் கண்டனம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மக்களவையில் 22 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

மக்களவையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக, 22 உறுப்பினர்களுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை நான்காவது பெரிய கட்சியாக உள்ளன.

மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக திரிணாமூல் காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.

மோடியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எனது அடுத்த அரசியல் நகர்வு – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

நடைபெறவுள்ள கூட்டத்தொடர் குறித்து பேசிய அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் சௌகட்டா ராய், “நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்தும், அதை சமாளிக்க பாஜக எப்படி தவறிவிட்டது என்பது குறித்தும் பேசுவோம். எரிபொருள் விலைகள் நாட்டில் பணவீக்கத்தை உண்டாக்குவதோடு பொருளாதாரத்தை எப்படி தலைகீழாக்கியுள்ளது என்பது குறித்தும் பேசுவோம்.” என்று கூறியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்