Aran Sei

8 நாட்களில் 7வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை – தலைநகர் டெல்லியில் ரூ.100ஐ கடந்தது பெட்ரோல் விலை

டந்த 8 நாட்களில் 7 முறை பெட்ரோல், டீசல் விலைய உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 100ஐ எட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிட்டருக்கு ரூ. 4.80 விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்டதற்கு பிறகு, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 100.21 ஆகவும் டீசலின் விலை ரூ. 99.41 ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் விரி விதிப்புகளுக்கு ஏற்ப மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறுபடுகிறது.

கடந்த நான்கரை மாதங்களாக உயர்த்தப்படாத பெட்ரோல் டீசலின் விலை மார்ச் 22 தேதி முதல் முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்