Aran Sei

படிப்படியாக தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை: 12 நாட்களில் ரூ. 7.20 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்று ( ஏப்ரல் 2) லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த 12 நாட்களில் 10 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 7.20 ரூபாய் அதிகரித்துள்ளது..

தலைநகர் டெல்லியில் ரூ. 101.81 விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது ரூ. 102.61க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேப்போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 93.07 லிருந்து ரூ. 93.87 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – பத்து நாட்களில் ரூ.6.40 உயர்வு

உள்ளூர் வரி விகிதங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

நவம்பர் 10 தேதிக்கு பிறகு நான்கரை மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் முதன்முறையாக உயர்த்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 12 நாட்களில் 10 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்