Aran Sei

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் – பெட்ரோலியத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

ந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது.  இந்தியா தனது 85 % எண்ணெய் தேவையை, சர்வதேச சந்தையை சார்ந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்றைய தினம், மும்பையில் பெட்ரோல் விலை ரூ .97.57 ஆகவும், டீசலின் சில்லறை விலை ரூ .88.60 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ”பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாம் விராத் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்றோர் சதம் அடித்து பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது நாம் பெட்ரோல் டீசல் விலை சதமடிப்பதைப் பார்க்கிறோம்” தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை விலையேற்றம்: உள்நாட்டு வளர்ச்சி என்பது இதுதானா? – ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவில் எரிபொருள் விலை தினமும் மாறி வருகிறது. உலகளாவிய எண்ணெய் விலை, மாறி வரும் பொருளாதார போக்குகள், மாநிலத்தில் விதிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), மத்திய அரசின் கலால் வரி ஆகியவற்றால் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசும் மாநில அரசுகளும் அமர்ந்து பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை – காரணம் என்ன?

இதற்கிடையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆதரவளித்துள்ளார். எனினும், இந்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் தான் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்

இதையடுத்து, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டு வருமாறு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார்.

Source: ANI, PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்