Aran Sei

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 16 நாட்களில் ரூ.10 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள்வரை உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் 14 முறை உயர்த்தப்பட்டு இதுவரை மொத்தமாக 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் ரூ 104.61க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 105.41க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 95.87 லிருந்து 80 காசுகள் அதிகரித்து 96.67க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110.95க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 101.12க்கு விற்பனையாகிறது.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

உள்ளூர் வரி விகிதங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

நவம்பர் 4 தேதியில் இருந்து நான்கரை மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்து பெட்ரோல், டீசல் விலை மார்ச் 22 தேதியில் இருந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் 14 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

Source: The Hindu

பாஜக கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவால் மக்கள் அனைவரும் குற்றவாளியாக்கப்படுவார்களா?

மஹுவா மொய்த்ரா சொல்வது என்ன? கிளிக் செய்யவும்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்