Aran Sei

பெட்ரோல், டீசல் விலை: ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக விலை உயர்வு

ன்று (மார்ச் 27) பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 55 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி விலைத் திருத்தம் செய்யும் முறை மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு வாரத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் மொத்த விலை உயர்வானது லிட்டருக்கு ரூ. 3.70-3.75 ஆக இருக்கிறது.

எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி,  டெல்லியில் பெட்ரோல் விலை முன்பு லிட்டருக்கு ரூ. 98.61 ஆக இருந்தது. தற்போது, ரூ.99.11 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.87-லிருந்து ரூ. 90.42 ஆக உயர்ந்துள்ளது .

டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் விலை உயர்ந்துள்ளது. அந்தந்த மாநிலங்களின் வரிவிதிப்புகளுக்கு ஏற்ப  மாநிலத்திற்கு மாநிலம் விலை மாறுபடும்.

ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை – கடந்த 5 நாட்களில் 3.20 ரூபாய் உயர்வு

நான்கரை மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 22 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக இன்று (மார்ச் 27) விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முந்தைய நான்கு முறைகளிலும், லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிக்கப்பட்டன . கடந்த ஆறு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.70 ரூபாயும், டீசல் விலை 3.75 ரூபாயும் உயர்ந்துள்ளது .

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்