கொரோனா தொற்றுகாலத்திற்கு பின் சவூதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை $70 டாலருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளுக்கு அருகில் தாக்குதல் நடந்ததை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விலையேற்றம் என அந்த அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்
உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி நடைபெறும் சவூதி அரேபியாவின் ராஸ் தணுரா பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் எண்ணெய்கிணறுகளுக்கு அருகில் உள்ள குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சா எண்ணெய்யின் விலை $70.7 டாலருக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்த விலையேற்றம் மேலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை முறையே 10 மற்றும் 11 ரூபாய் உயர்த்திய பொழுதே பெட்ரோல் விலை இந்தியாவின் சில பகுதிகளில் 100 ரூபாயை தாண்டியது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த மூன்று மாதங்களில் 26 முறை பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்ததாகவும் அதிகபட்சமாக தொடர்ந்து 9 நாட்கள் உயர்த்த படாமல் இருந்தது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை முறையே 10 மற்றும் 16 ரூபாய் என்று விதித்தாகவும் இதுமட்டுமல்லாமல் மாநில அரசின் வரியும் தனியே விதிக்கப்படுகிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் மீதான இந்த அதிக விலையைச் சமாளிக்க மேற்கு வங்கம், அசாம், மேகாலயா அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து வைத்திருந்தது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அதன் அடிப்படை விலையிலிருந்து பெட்ரோலை 162 சதவீதமும் மற்றும் டீசல் விலையை 125 சதவீதமாகவும் நிர்ணயித்து இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.