Aran Sei

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 13 நாட்களில் ரூ.8 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 13 நாட்களில் 11 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக லிட்டருக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ரூ. 102.61 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று 80 காசுகள் உயர்ந்து, ரூ. 103.41 ஆக உள்ளது. இதேப்போன்று ரூ. 93.87 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.67 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 120.54க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ 103.97க்கும் விற்பனையாகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 118.41 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 102.64 ஆக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108.96 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.04க்கும் விற்பனையாகிறது.

நவம்பர் 4 தேதிக்கு பிறகு நான்கரை மாதங்களாக உயர்த்தபடாமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை மார்ச் 22 தேதியில் இருந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்