Aran Sei

ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை – கடந்த 5 நாட்களில் 3.20 ரூபாய் உயர்வு

ன்று பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3.20 ரூபாய் உயர்ந்துள்ளது.

விலை உயர்விற்குப் பிறகு, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 98.61 ரூபாய் ஆகவும், டீசல் லிட்டருக்கு 89.87 ரூபாய் ஆகவும் உள்ளது.

ஷிவமொக்காவைத் தொடர்ந்து சாகர் நகர் – திருவிழாவில் இஸ்லாமியர்கள் கடை போட எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத்

நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் 137 நாட்களாக மாற்றமடையாமல் இருந்தது.

இதன் பிறகு மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்