Aran Sei

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 14 நாட்களில் ரூ.8.40 உயர்வு

Image credit : thehindu.com

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 14 நாட்களில் 12 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக லிட்டருக்கு 8.40 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதையடுத்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.8.40 அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த விலை முதல் முறையாக மார்ச் 22 அன்று திருத்தப்பட்டது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – 13 நாட்களில் ரூ.8 உயர்வு

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. புதுடெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 காசுகள் மீண்டும் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.81 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.07 ஆகவும் உள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.118.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.103.07 ஆகவும் உள்ளது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.113.45 ஆகவும், டீசல் விலை ரூ.98.22 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் தகவல்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34 ஆகவும், டீசல் விலை ரூ.99.42 ஆகவும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம்தான்: முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்