Aran Sei

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை – ரூ.100ஐ தாண்டிய டீசல் விலை

டெல்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.105.14 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.111.09 ஆகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது, எரிபொருள் விலை மீண்டும் லிட்டருக்கு 35 பைசா அதிகரித்துள்ளது

அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, டெல்லியில் பெட்ரோலின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ 105.14 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ.111.09 ஆகவும் உயர்ந்தது.

மும்பையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.78 க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் டீசலின் விலை ரூ 93.87 ஆக இருக்கிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை ₹ 100-க்கு மேல் இருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் டீசல் விலையும் ரூ.100 தொட்டுள்ளது.

உள்ளூர் வரி விகிதத்தைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும்.

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயருகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்