Aran Sei

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

credits : world finance

க்ரைன் – ரஷ்யா போரினால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதே தவிர தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை – மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

“ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நடந்துள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா நேற்று(மார்ச் 25) நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கும் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார்.

ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை – கடந்த 5 நாட்களில் 3.20 ரூபாய் உயர்வு

உக்ரைனில் நடந்து வரும் போரினால் கச்சா எண்ணெயின் விநியோகச் சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிப்படைந்துள்ளது. மேலும் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை அதீதமாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Source : TOI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்