Aran Sei

‘பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில்தான் கொரோனா இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டது’ – பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி

பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் கொண்டுதான் கொரோனா இலவச தடுப்பூசி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன என ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

இந்திய எரிசக்தி மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹர்தீப் பூரி, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $19 அல்லது $84 இருந்தாலும்,   ஒன்றிய அரசு லிட்டருக்கு ரூ. 32 மட்டுமே கலால் வரியாக வசூலிக்கிறது. அதே சமயம் மாநில அரசுகள் உயரும் விலைக்கு ஏற்ப மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன” என கூறியுள்ளார்.

‘எல்லைப் பாதுகாப்பு படைக்கான அதிகார நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்’ – பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை

”சில நாடுகளுக்கிடையேயான பிரச்சினை மற்றும் சில நாடுகளில் நிலவி வரும் குளிர் காலம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அரசியல் கதைகள் மிகவும் எளிமையானவை, அதனால் உண்மையான காரணத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: ஒன்றிய அரசின் இணையமைச்சரை கைது செய்யக் கோரி அக்டோபர் 26 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம்

“நேற்றோடு நூறு கோடி தடுப்பூசி செலுத்தி முடித்திருக்கிறோம். 90 கோடி இந்தியர்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் 3 வேளை உணவு வழங்கியிருக்கிறோம். புகை அடுப்புகளில் சமைத்து, ஆரோக்கியத்தை இழந்துவந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு உஜ்வாலா திட்டத்தை வழங்கியுள்ளோம். நாடு முழுவதும் ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளையும் எட்டு கோடி சிலிண்டர்களையும் வழங்கியுள்ளோம். பெட்ரோல் மீது வசூலிக்கப்படும் 32 ரூபாய் வரியில் இருந்து தான், 100 கோடி தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன” என அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியுள்ளார்.

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்வதை நிறுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு மத்திய தொழிற்சங்கங்கள் கடிதம்

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு விடுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “அதற்குள் விலை குறைந்துவிடும், ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்