Aran Sei

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

யுதப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான  ஒன்றிய அரசின் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, கோடை விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மனுக்கள் பொருத்தமான அமர்வு முன் பட்டியலிடப்படும் என்று கூறியுள்ளது.

திருவண்ணாமலை: முகப்பருவைக் கிள்ளியதால் மாணவர் உயிரிழந்ததாக ஆசிரியர் மீது புகார் – அரசியல் பழிவாங்கல் என ஆசிரியர் குற்றச்சாட்டு

முன்னதாக, ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கான ஆட்கள் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றுவருகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.

‘அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது’ – பாஜகவுக்கு தெலங்கான அமைச்சர் பதிலடி

4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தை அரசியல் கட்சியினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் எதிர்த்து வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்து. ரயில்கள் எரிக்கப்பட்டன என்பவை குறிப்பிடத்தக்கன.

Source: ndtv

Periyar தான் எங்க ஆளு | Jeeva Sagapthan Interview | Swaminathan | Rangaraj Pandey | Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்