Aran Sei

மதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற மனுத்தாக்கல் – பதிலளிக்க கோரி மசூதி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

துராவில் அமைந்துள்ள மசூதியை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு மசூதி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்பாக, கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் இடமும், கிருஷ்ண ஜென்ம பூமியென அழைக்கப்படும் மதுரா கோவிலை (கேசவ தேவ கோயில்), ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகில் உள்ள மசூதியை (ஷாஹி இத்கா மசூதி) ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டியும் நிர்வகித்து வருகின்றன.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் – 10 ஆண்டு தண்டனையையும் நிறுத்தி வைத்த மும்பை உயர்நீதிமன்றம்

இவ்விரண்டிற்கும் இடையே கடந்த 1968-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, கோவிலும், மசூதியும் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அருகருகில் அமைந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, தற்போது செயல்பாட்டிலிருந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, மதுராவின் கேசவ தேவ கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி 1968-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் தன்னிடமே ஒப்படைக்கக் கோரியும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கோயில் மற்றும் மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலம் தன்னுடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்றும் 1968-ம் ஆண்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்த முழு நிலத்தையும் தன்னிடமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

மேலும், ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை கமிட்டி, கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் மசூதியைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் ஷுக்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாகச் சனிக்கிழமை (பிப்ரவரி6) அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஷாகி ஈத்கா மசூதி  நிர்வாகம் மட்டுமின்றி, லக்னோ சன்னி வக்பு வாரியம், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளையுள்ள கத்ரா கேசவ் தேவ் கோயில், ஸ்ரீ கிருஷ்ணா சேவா சனஸ்தான் ஆகியவற்றுக்கும் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“உங்கள் டிராக்டர் கவர்ச்சிகரமானது” – விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் குரல் எழுப்பிய அமெண்டா

“இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று ஏற்றுக்கொண்டு, விரிவான விசாரணைக்கு வழக்கோடு தொடர்புடைய 4 பிரிவினருக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கின் விசாரணை மார்ச் 8-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் 4 பிரிவினரும் பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” எனறு மாவட்ட அரசு வழக்கறிஞர் சஞ்சய் கவுர் கூறியுள்ளார்.

மதுராவில் அமைந்துள்ள மசூதியை அகற்றக்கோரி இந்து மற்றும் வலது சாரி அமைப்புகள் பல்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்தாலும் மதுரா சிவில் நீதிமன்றம் பெரும்பாலான மனுக்களைத் தள்ளுபடி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்