Aran Sei

கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் வருமானத்தையும்  கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ‘இந்துக்களை சில கிறிஸ்தவ அமைப்புகள் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்து வருகின்றன. எனவே கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் சொத்துகள், வருமானம், செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் தனியாக கண்காணிப்பு வாரியம் அமைக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளதாகவும், அதன்படிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரமேஷ். அதில், ‘இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம் அமைத்து, அவற்றை ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,‘‘இது பொதுநல நோக்குடன் தொடரப்பட்டதாக தெரியவில்லை. விளம்பர நோக்கில் தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றால் மத நல்லிணக்கம் சீர்குலைந்துவிடும். எனவே, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போகிறோம்’’ என்று எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்