ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் அயோத்தி மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்துள்ள இம்மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ருத்ர விக்ரம் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இம்மனு தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள மனுதாரர் டாக்டர் ரஜ்னீஷ் சிங், “தாஜ்மஹாலில் தோராயமாக 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன. யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை. இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
உண்மைகளைக் கண்டறிய இந்த அறைகளைத் திறக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் நான் மனு தாக்கல் செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
அம்மனுவில், “இந்த அறைகளை ஆய்வு செய்து, அங்குள்ள இந்து கடவுள் சிலைகள் அல்லது புனித நூல்கள் தொடர்பாக ஆதாரங்களைத் தேட ஒரு குழுவை அமைக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றத்திடம் உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் கோரியுள்ளார்.
பல வலதுசாரி அமைப்புகள் தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்றும் அது ஒரு இந்துக் கோயில் என்றும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Source: Hindustan Times
பாஜகங்கிற சாக்கடைல விழுந்தா இப்படி தான் ஆகும் Vanni Arasu Interveiw
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.