உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள்மீது கார் ஏற்றிக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை ஆகியிருக்கும் ஒன்றிய அமைச்சரின் மகன் அஷிஷ் மிஸ்ராவ்வின் பிணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அஷிஷ் மிஸ்ராவிற்கு பிணை வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் பிப் 10 ஆம் தேதி வழங்கிய உத்தரவிற்கு எதிராக வழக்கறிஞர்கள் சிவ் குமார் திரிபாதி மற்றும் சிஎஸ் பாண்டா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கலவரம் வெடித்தது. இதில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
லகிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து முழுஅடைப்பு – முடங்கியது மகாராஷ்டிரா
இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிப். 10 ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ”பிணை உத்தரவில், வெளிப்படையான பிழை உள்ளது. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டுநர் காரின் வேகத்தை அதிகரித்தார் என முன்முடிவு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் கேரி வன்முறை’: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது ஏன்? என உத்திரபிரதேச காவல்துறை, சிறப்பு புலனாய்வு குழு, உத்திரபிரதேச அரசு தரப்பு ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.