Aran Sei

பிற மதத்திலிருந்து இஸ்லாம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குக – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

பிற மதங்களிலிருந்து இஸ்லாம் மாதத்திற்கு மாறியவர்களுக்கு “பிற்படுத்தப்பட்டோர்” என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு  மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் மார்கத்திற்கு மாறியவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள்” என்ற வகைப்படுத்துதல் தரப்படாமல் அவர்களை “மற்றவர்கள்” என்று வகைப்படுத்துவதால் இட ஒதுக்கீட்டின் பயனை அவர்கள் அடைய முடியவில்லை.

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள். பட்டியல் இனத்தை சார்ந்தவர்களாக இருந்த போதிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றே தமிழக அரசால் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் இஸ்லாத்திற்கு மாறுகின்றபோது மாறுவதற்கு முன் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆக இருந்தாலும், மதம் மாறிய பிளபு அவர்கள் “மற்றவர்கள்” என்றே வகைப்படுத்தப்படுவதால், இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டுள்ள “பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்ற வகைப்படுத்துதலை பெற முடியவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பிறப்பால் இஸ்லாமியரா அல்லது மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியரா என்ற ஒரு தனி வினாவை வைக்கின்றது. பிறப்பால் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் மதம் மாற்றப்பட்டவர்களை, மற்றவர்கள் என்றும் வகைப்படுத்துகின்றது. அரசு செயவர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட 22.8.2012 தேதியிட்ட அரசு ஆணை மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியர்களை “மற்றவர்கள்” என்றே வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுவதால் இந்த அநீதி தொடர்ந்து இழைக்கப்படுகின்றது.

15 நாட்களில் ரூ.9.20 உயர்ந்த பெட்ரோல்: சென்னையில் லிட்டர் ரூ.110

மதம்’ மாறிய ஒரே காரணத்தால் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த இட ஒதுக்கீட்டு உரிமைகளையும் இழந்து, இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு உரிமைகளும் கிடைக்க முடியாமல் நிற்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக அரசு கருதி சமர்ப்பிக்கப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றேன். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு எத்தகைய இட ஒதுக்கீட்டு உரிமைகளை அரசு வழங்கியுள்ளதோ அதே உரிமைகளை இஸ்லாமியருக்கும் வழங்குகின்ற விதத்தில் புதிய அரசாணை வெளியீடப்பட வேண்டும் வேண்டுகிறேன்.

மேலும் பட்டியல் இனத்திலிருந்து பௌத்தக்கிற்கு மதம் மாறியவர்கள் தொடர்ந்து பட்டியல் இனத்தவர் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது பிற்படுக்கப்பட்டவர்கள் வகுப்பிலிருந்து, பௌத்தத்திற்கு மதம் மாறினால் அவர்கள் “மற்றவர்கள்” என்றே வகைப்படுத்தப்படுகின்றனர். அதனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் பெற்று வந்த இட ஒதுக்கீட்டு உரிமைகளை இழந்து விடுகின்றார்கள். எனவே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீகவும் பிற்படுத்தப்பட்டோர். சாதியிலிருந்து பௌத்தத்திற்கு மதம் மாறியவர்கள் தொடர்ந்து, மகம் மாறுவதற்கு முன்னர் இருந்த இட ஒதுக்கீட்டு அங்கீகாரத்தை பெறவும் அரசு தகுந்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

********************                                        ********************************                 ****************

மோடியை விட அதிகமாகப் பொய் சொல்லும் ரங்கராஜ் பாண்டே.. 

பாண்டேவின்  தோலுரிக்கும் கனகராஜ். 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்